ஈட்டி பாய்ந்து உலகின் மிக வயதான சிங்கம் மரணம்
உலகிலேயே மிகவும் வயதானது என்று நம்பப்படும் கென்ய நாட்டின் சிங்கம் ஒன்று மாசாய் போர்வீரர்களால் ஈட்டியால் கொல்லப்பட்டு இறந்துள்ளது.
19 வயதேயான Loonkito என்ற சிங்கம் இரை தேடச் சென்ற நிலையில் Olkelunyiet கிராமப் பகுதியில் வைத்து மாசாய் போர்வீரர்களால் ஈட்டியால் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Picture: Christophe Bayle
மேலும், தங்கள் பசுக்கள் கூட்டத்தில் இருந்து சிங்கத்தை துரத்தவே முதலில் முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் இறுதியில் தாக்கும் முடிவுக்கு வந்ததாக கூறுகின்றனர்.
மட்டுமின்றி, சிங்கத்தின் தலையில் காயம்பட்டதாலையே, காப்பாற்ற முடியாமல் போனதாகவும் கூறுகின்றனர். Loonkito நீண்ட காலம் உயிருடன் இருப்பதை வனவிலங்கு ஆர்வலர்கள் பலரால் கொண்டாடப்பட்டு வந்தது.
தற்போது அதன் இறப்பு பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தனது இரையை தாமே வேட்டையாடும் குணம் கொண்டது Loonkito சிங்கம் என கூறியுள்ள உயிரியல் பூங்கா நிர்வாகிகள், வயதானதால் கிராமப்பகுதிக்கு சென்று பசு, ஆடு உள்ளிட்ட வீட்டு மிருகங்களை அது வேட்டையாடி வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
Pic: Facebook
பொதுவாக இளம் சிங்கங்கள் காட்டுக்குள் சென்று வேட்டையாடுவதே வழக்கம் எனவும் கூறுகின்றனர். ஆப்பிரிக்க சிங்கங்கள் பொதுவாக 18 ஆண்டுகள் வரையில் உயிர் வாழும். ஆனால் Loonkito 19 ஆண்டுகள் உயிருடன் இருந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் 23,000 சிங்கங்கள் இருப்பதை உறுதி செய்துள்ள வனம் வகுப்பு, கடந்த 10 ஆண்டுகளில் 90 சதவீதம் அளவுக்கு அதன் எண்ணிக்கை சரிவடைந்ததாகவும் கூறுகின்றனர்.