உலகின் முக்கிய கவனம் பெற்ற பேஷன் நிகழ்ச்சி; அரசியல் பரபரப்பைக் கிளப்பும் இடமாக !

us dress fashion-show
By Sulokshi Sep 15, 2021 11:32 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 உலகின் முக்கிய கவனம் பெற்ற பேஷன் நிகழ்ச்சி தற்போது அரசியல் பரபரப்பைக் கிளப்பும் இடமாக மாறியுள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் நடப்பாண்டு பல்வேறு அரசியல் அர்த்தம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அமெரிக்காவில் நடைபெறும் இந்த மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றது.

இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகைகள், நடிகர்கள், மாடல்கள் என பிரபலம் வாய்ந்த பலரும் கலந்து கொள்வது வழக்கம்.

அந்தவகையில் நடப்பாண்டு நடைபெற்றுவரும் மெட்காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் அர்த்தம் பொருந்திய உடைகளை உடுத்தி வந்த மாடல்களால் நிகழ்ச்சியில் பரபரப்பு கூடியுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல தனியார் நிகழ்ச்சி பிரபலமான கிம் கர்தாஷியனின் உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நிகழ்வில் அவர் கருப்பின மக்கள் மீதான வன்முறையை எதிர்த்தும், கருப்பின மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் கிம் கர்தாஷியன் தலை முதல் முழு உடலையும் மறைக்கும் விதமாக கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டார்.

அதேபோல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ கார்டஸ் அணிந்து வந்த ஆடையும் பேசுபொருளாகியுள்ளது. அவர் அணிந்து வந்த வெள்ளை நிற ஆடையின் பின்புறம் பொறிக்கப்பட்டிருந்த செல்வந்தர்களுக்கு வரி விதிப்பீர் என்கிற வாசகம் தற்போது பரபரப்பாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


Gallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US