உலகின் மிக வயதான பெண்மணி உயிரிழப்பு
உலகின் மிக வயதான பெண்ணாக (Inah Canabarro Lucas) அறியப்பட்ட கானபரோ லூகாஸ் 116 வயதில் காலமானார்.
வயது முதிர்வு காரணமாக கேசெரோஸில் உள்ள சாண்டா காசா டி மிசரிகார்டியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் (Inah Canabarro Lucas) கடந்த 30 ஆம் திகதி உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கானபரோ ஜூன் 8, 1908 அன்று பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுலில் பிறந்தார். 1934 ஆம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு கானபரோ (Inah Canabarro Lucas) வாழ்ந்து வந்தார்.
அதேவேளை கானபரோ லூகாஸின் (Inah Canabarro Lucas) மரணத்துக்கு பின், இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர் இப்போது உலகின் வயதான பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.