ரஷ்யா தொடர்பில் உலக நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் விடுத்த கோரிக்கை
ரஷ்ய படையெடுப்பால் கடும் அவதிக்குள்ளான உக்ரைன் மக்களுக்கு போதிய உதவியை முன்னெடுக்க வேண்டும் எனவும், போர் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மால்டாவில் இறுதி ஆராதனையை முடித்த போப் பிரான்சிஸ், விசுவாசிகளை வலியுறுத்தினார். மட்டுமின்றி, உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வர வேண்டும் எனவும், உக்ரைனை விட்டு வெளியேறியுள்ள அப்பாவி மக்களிடம் உலகம் கருணையும் இரக்கமும் காட்ட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, இரு நாட்டு ஜனாதிபதிகளும் போர் தொடர்பில் நேரிடையாக சந்தித்து விவாதிப்பது தொடர்பில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், இருவருக்குமான சந்திப்புக்கு முன்னர் முடிக்க வேண்டிய பணிகள் அதிகமிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.