பிரித்தானியாவில் சிக்கிய கனேடிய தலைமறைவுக் குற்றவாளி
கனடாவில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கனேடியர் ஒருவர் பிரித்தானியாவில் சிக்கினார்.
மே மாதத்தில், கனடாவின் ரொரன்றோவில், Adrian Gordon (24) என்பவர், பாடி பில்டரான Jesse Tubbs (30) என்பவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவானார்.
Jesse மருத்துவமனையில் உயிரிழக்க, Adrianஐ பொலிசார் தீவிரமாக தேடிவந்தனர். அவர் வெளிநாடொன்றிற்குத் தப்பியிருக்கலாம் என தெரியவந்ததைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் தேடுதல் வேட்டை துவங்கியது.
இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள Luton என்னுமிடத்தில் Adrian பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்கவே, கனடா பொலிசார் பிரித்தானிய பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.
அதன்படி, அதிரடியாக Adrian தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்த பிரித்தானிய பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
தங்கள் வீட்டுக்கருகே வாழ்ந்துவந்தவர், கொலைக்குற்றம் செய்துவிட்டு தலைமறைவாக வாழ்ந்துவந்தவர் என தெரியவந்ததால், அந்த குடியிருப்பில் வாழ்பவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
Adrianஐ கனடாவுக்குக் கொண்டு வருவதற்காக நடைமுறைகள் துவக்கப்பட்டுள்ளன.