ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவால் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் ; ஈரான் ராணுவ அதிகாரி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுப்பார்கள் என ஈரான் ராணுவ அதிகாரியும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் முன்னாள் தலைவருமான முகமது பாக்பூர் தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா இடையே நிலவிவரும் பதற்றம் புதிய உச்சங்களை எட்டுவதை சர்வதேச நாடுகள் தடுக்காவிட்டால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதை தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பேரழிவு
பதற்றத்தை அதிகரித்து உலகை இதுவரை இல்லாத பேரழிவை நோக்கித் தள்ளுவதால், ட்ரம்ப்பையும் நெதன்யாகுவையும் ஹிட்லர், செங்கிஸ்கான் உடன் மொஹ்சென் ரெசாயி ஒப்பிட்டுள்ளார். இது கவனிக்கப்பட வேண்டியது எனக் குறிப்பிடுள்ளார்.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த ராணுவ அதிகாரியும் இஸ்லாமிய ஈரானின் எதிர்ப்பு முன்னணியைச் சேர்ந்தவருமான மொஹ்சென் ரெசாயி, ட்ரம்ப்பின் செயல்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதேபோன்று ஈரானின் மற்றொரு ராணுவ அதிகாரி முகமது ஜாவத் லரிஜானி கூறுகையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் வேர்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படும் என்றும், பெரிய அளவிலான அமெரிக்கர்களின் பலிக்கு இது காரணமாகிவிடும் எனவும் எச்சரித்தார்.