மல்யுத்த வீராங்கனை மரணம்; ஜப்பான் அதிரடி உத்தரவு!
ஐப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனை 22 வயதான ஹன்னா ஹிமுரா (Hana Kimura) அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
சமூகவலைதளத்தில் இளைஞர் ஒருவர், அருவருப்பான கருத்துகளை பரப்பியதால் மனமுடைந்த ஹன்னா, இந்த முடிவை எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது போன்ற சைபர் மிரட்டல் மற்றும் அவமதிப்பு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரவேண்டும் என மக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது சைபர் மிரட்டல்களுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தை ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் சைபர் மிரட்டல் குற்றவாளிகளுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது 300,000 யென் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இந்நிலையில் தற்போது ஜப்பானில் இது போன்ற குற்றங்களுக்கு 30 நாட்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை மற்றும் 10,000 யென் அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.