எக்ஸ் தளம் முடக்கம்: பின்னணியில் உக்ரைன்
சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் தளம் திங்கட்கிழமை (10) செயலிழந்தமைக்கு உக்ரேனில் இருந்து வந்த ஐபி முகவரிகளைக் கொண்ட பாரிய சைபர் தாக்குதல் காரணம் என அதன் உரிமையாளர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது பற்றி குறிப்பிட்ட எலன் மஸ்க் "என்ன நடந்தது என்பது எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் எக்ஸ் தளத்தை வீழ்த்த முயற்சிக்கும் ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடந்தது. அதன் ஐபி முகவரிகள் உக்ரேன் பகுதியைச் சேர்ந்ததாக தென்பட்டது என மேலும் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளம் செயலிழப்பு
நேற்று(10) பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியது. சில மணி நேரங்களில் பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் மாலை 7 மணிக்கும், மூன்றாவது முறையாக 8.45 மணிக்கு மீண்டும் தளம் முடங்கியதுடன் இந்த முடக்கம்பல மணி நேரம் நீடித்ததுள்ளது.
திங்கட்கிழமை காலை 6 அளவில் 20,538 பேரும், 10 மணியளவில் 40,000 பேரும் செயலிழப்பு குறித்து முறைப்பாடு செய்ததாக செயலிழப்பு கண்காணிப்பு தளமான டவுன்டெடெக்டர் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு பின்னர் முறைப்பாடுகள் குறைவடைந்ததோடு, எக்ஸ் தளம் வழமைக்கு திரும்பியது. இந்த செயலிழப்பு உகளாவிய ரீதியில் ஏற்பட்டதாக டவுன்டெடெக்டரின் சர்வதேச தளங்கள் தெரிவித்துள்ளன.