கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு சைக்கிளோட்டி ஒருவர் படுகாயம்
கனடாவின் ஒக்வில்லில் உள்ள ஒரு மாலுக்கு அருகே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த 67 வயது முதியவர் வாகனம் ஒன்றால் மோதப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலை 11:49 மணியளவில் ரெபேக்கா தெரு மற்றும் தேர்ட் லைன் கிழக்கு பகுதியில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹால்டன் பிராந்திய காவல்துறையினர் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மேற்கு நோக்கி ரெபேக்கா தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த அந்த முதியவர், சவுத் ஒக்வில் சென்டரின் வாகன நிறுத்துமிடத்திற்கு இடது புறமாக திரும்ப முயன்ற ஒரு ஹேட்ச்பேக் வாகனத்தால் மோதப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட சைக்கிள் ஓட்டுநர் உடனடியாக புரோக் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பில் விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.