கனடாவில் 7வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயம்
கனடாவில் 7வயதான சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளான்.
கனடாவின் லண்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. லண்டனின் பினான்சார்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்கு உள்ளேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தவறுதலாக துப்பாக்கி வெடித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 44 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் சட்டவிரோதமான முறையில் ஆயுதம் வைத்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.