பிரித்தானியாவில் கடும் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
பெஞ்சமின் புயல் பிரித்தானியாவின் பல பகுதிகளை இன்று தாக்கும் என்றும் இதனால் நாடு முழுவதம் கடும் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்படும் எனவும், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பயண இடையூறுகளையும் சந்திக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சமின் புயலானது ஆங்கிலக் கால்வாயிலிருந்து வட கடல் நோக்கி நகரும்போது, பெரிய அலைகள் உருவாகும் எனவும் இதனால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சில பகுதிகளில் கடுமையான காற்று வீசக்கூடும் எனவும், எனவே மக்கள் ஆபத்துக்களை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.