புகைப்பட மோகத்தால் 246 அடி ஆழ பள்ளத்திற்குள் விழுந்து உயிரிழந்த இளம்பெண்!
சீனாவை சேர்ந்த 31 வயதான ஹுவாங் லிஹோங் மற்றும் அவருடைய கணவர் ஜாங் யாங் இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
குறித்த தம்பதியினர் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இஜென் என்ற எரிமலை பகுதிக்கு சென்றனர். இது பார்ப்பதற்கு நீல வண்ணத்தில் காட்சி தரும் என்பதால் அதில் ஈர்க்கப்பட்டு இந்த தம்பதி எரிமலை அருகே சென்றுள்ளனர்.
இதன்போது, லிஹோங் புகைப்படம் ஒன்றை எடுக்க விரும்பியுள்ளார். அப்போது, அவர் திடீரென தவறி மலையின் 246 அடி ஆழ பள்ளத்திற்குள் விழுந்துள்ளார்.
முதலில், எரிமலையின் முனை பகுதியில் 8 அல்லது 9 அடி தொலைவிலேயே பாதுகாப்பாக லிஹோங் நின்றிருக்கிறார்.
அதன்பின்பு, புகைப்படத்தின் பின்னணி நன்றாக இருக்க வேண்டுமென நெருங்கி சென்றிருக்கிறார்.
அவருடைய கணவர் புகைப்படம் எடுத்தபடி இருந்திருக்கிறார். இதில், லிஹோங்கின் ஆடை காற்று வேகத்தில் இழுத்ததில், கவனக்குறைவாக பின்னால் சென்றுள்ளார்.
இந்த தவறான செயலால், அவர் எரிமலைக்குள் விழுந்து உயிரிழந்து உள்ளார்.
மேலும், அவர்களுடைய சுற்றுலா வழிகாட்டி தொடர்ந்து எச்சரித்து வந்தபோதும், லிஹோங் தொடக்கத்தில் அதனை கேட்டு கொண்டாலும் பின்னர் கவனத்தில் கொள்ளவில்லை.
இந்த சம்பவத்தில் 2 மணித்தியாலத்தில தேடுதலுக்கு பின்பு அவருடைய உடல் மீட்கப்பட்டுள்ளது.