திருமணம் செய்து வெளிநாடு செல்ல தயாரான தமிழ் யுவதியின் விபரீத முடிவு
வெளிநாடு செல்வதற்கு தயாராக இருந்து இளம் யுவதி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக கடமையாற்றிய 20 வயதுடைய விஜிதா சஞ்சீவனி என்ற யுவதி இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
இறக்குவானையில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கால் வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அவரது பாட்டி சென்றிருந்த வேளையிலேயே யுவதி இவ்வாறு செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதி அடுத்த மாதம் திருமணம் செய்து கொண்டு இஸ்ரேலுக்கு வேலைக்கு செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணம் செய்யவிருந்த நபருக்கும் உயரிழந்த யுவதிக்கும் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.