ரொறன்ரோவில் மற்றுமொரு துப்பாக்கி சூடு
கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம் பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பிளாக் கிரிக் மற்றும் பிரீத் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கனடாவின் துப்பாக்கிச் சூடு தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இட இடத்திற்கு விரைந்து காயமடைந்த நபரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

எனினும் இந்த முயற்சியை வெற்றி அளிக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றதாக தெரிவிக்க சிசிடிவி காணொளிகள் திரட்டப்பட்டு வருவதாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் அடிப்படையில் சந்தேக நபர் பற்றிய தகவல்களை எதிர்வரும் நாட்களில் வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        