டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய திட்டம்; வெள்ளை மாளிகை அருகே இளைஞர் கைது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யும் திட்டத்துடன் வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளை மாளிகை அருகே நேற்று இரவு சந்தேகமான வகையில் கார் நின்றுகொண்டிருந்தது. இதனால் விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் காரில் இருந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஆயுதங்கள் பறிமுதல்
அப்போது அந்த இளைஞர் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளதுடன் மேலும், அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
அந்த இளைஞரின் காரில் சோதனை நடத்திய பாதுகாப்புப்படையினர் அதில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பின்னர் பாதுகாப்புப்படையினர் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.