மரங்களை கட்டிபிடித்து உலக கின்னஸ் சாதனை படைத்த இளைஞன்!
கானாவில் இளைஞன் ஒருவர் ஒரு மணித்தியாலத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கானாவை சேர்ந்த 29 வயதான அபுபக்கர் தாஹிரு வனவியல் ஆர்வலராக உள்ள இவரே ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை தொடர்பான காணொளியை உலக கின்னஸ் சாதனை நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.
அதன்படி சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 19 மரங்களை கட்டிப்பிடித்துள்ளார். இந்த சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
சாதனை தொடர்பில் அபுபக்கர் தெரிவிக்கையில்,
இந்த உலக சாதனையை அடைவது நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி அளிக்கிறது. இது நமது சுற்றுச்சூழல் அமைப்பின் மரங்களின் முக்கிய பங்கை எடுத்து காட்டுவதற்கான ஒரு அர்த்தமுள்ள செயலாகும் என்றார்.