கனடிய மாகாணமொன்றின் முதல்வர் ரஞ்ச் பிள்ளை ராஜினாமா
கனடாவின், யுகான் மாகாண முதல்வர் ரஞ்ச் பிள்ளை நேற்று அவரது பதவியிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்வும் அறிவித்துள்ளார்.
இந்த முடிவை எடுக்குமுன் அவர் தனது மகனுடன் யுகான் ஆற்றின் கரையில் முக்கிய உரையாடல் நடத்தியதாக கூறியுள்ளார்.
“எங்களைப் போன்றவர்கள் இந்த பணியை செய்யக்கூடியவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று என் மகன் என்னிடம் கூறினார்,” என பிள்ளை கூறியுள்ளார்.
ரஞ்ச் பிள்ளையின் தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பதவி என்பது தனது வாழ்நாளிலேயே மிகப் பெரிய பெருமை என பிள்ளை குறிப்பிட்டார்.
•டெம்ப்ஸ்டர் ஃபைபர் திட்டம் மூலம் தொலைதொடர்பு வசதியை மேம்படுத்தல்
• யுகான் பல்கலைக்கழகத்தை நிறுவுதல் – வடக்கிலேயே முதல் பல்கலைக்கழகம்
• மாற்றுத்திறனுள்ள மக்களுக்கு நீதியை மேம்படுத்தும் முயற்சிகள் என பல்வேறு வழிகளில் மக்களுக்கு சேவைகளை வழங்க கிடைத்துள்ளது என பிள்ளை தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தல் நடைபெறும் வரை, பிள்ளை தொழில்துறை வளர்ச்சி அமைச்சர் பதவியில் பணியாற்றத் தயார் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவால் ஏற்பட்ட இறக்குமதி வரி பிரச்சனை, மருத்துவர்கள் மற்றும் தாதியர் நியமனம் ஆகியவை முக்கியமான தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாகாணத் தேர்தல் நவம்பர் 3ம் திகதிக்கு முன் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.