தெற்காசியாவிற்கே பெருமை சேர்ந்த இலங்கையர்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஓட்டப் போட்டியொன்றில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் அபார சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
இதுவரை காலமும் தெற்காசிய வீர்ர் ஒருவரினால் எட்டப்பட முடியாதிருந்த சாதனையை யுபுன் நிலைநாட்டியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற Resisprint International ஓட்டப் போட்டியில் யுபுன் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்தப் போட்டியில் யுபுன் 100 மீற்றர் ஓட்ட துரத்தை 9.96 செக்கன்களில் ஓடி முடித்துள்ளார்.
தெற்காசிய வீரர்கள் எவரும் பத்து செக்கன்களுக்குள் 100 மீற்றர் ஓட்டத்தை கடந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிர்வரும் காலங்களில் ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வென்றெடுக்கக் கூடிய குறுந்தூர ஓட்ட வீரர் என யுபுன் மீது பெரும் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
https://twitter.com/i/status/1543599164684398593