வரலாற்றின் தவறான பக்கத்தில் அமெரிக்கா.. கடும் அதிருப்தியில் ஜெலன்ஸ்கி
உக்ரைன் போருக்கு மத்தியில் அமெரிக்கா உட்பட உலகச் சந்தைகளுக்கு ரஷ்யாவிலிருந்து 300,000 டன்களுக்கும் அதிகமான டீசலை வழங்குவதற்காக ரஷ்யா மீதான டீசல் ஏற்றுமதி தடைகளை தளர்த்தும் ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ஈரான் போரினால் உலக சந்தையில் உயர்ந்துள்ள எரிபொருள் விலைகளைக் குறைக்கவும், விநியோகத்தை அதிகரிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ட்ரம்ப் இதை நியாயப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பிரிட்டனின் 'பியர்ஸ் மோர்கன் அன்சென்சர்ட்' நேர்காணல் நிகழ்வில் பேசிய ஜெலன்ஸ்கி, அமெரிக்கா வரலாற்றின் 'தவறான பக்கத்தில்' இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ட்ரம்ப் நம்மைத் தவிர்த்து வேறு ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுப்பது வருத்தமளிக்கிறது. குறைந்தபட்சம் அவர் நடுநிலையாக இருக்க வேண்டும், ஆனால் தவறான பக்கத்தில் இருக்கக்கூடாது. ட்ரம்ப் தனது ஆலோசகர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்.
இந்த முடிவு வரலாற்று ரீதியாக தவறானது. இந்த நிகழ்வின் மூலம் ஒரு வலுவான கூட்டாளியை இழந்துவிட்டோம்" என ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்தார்.