காசா போர் நிறுத்தம்; ட்ரம்பிடம் பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமுதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. விரைவில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.
இதன்மூலம் போர் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ஐ தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
போரை நிறுத்த முடியும்...
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் "நான் டிரம்ப் உடன் பேசினேன். அப்போது, இஸ்ரேல்- காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன்.
ஒரு பிராந்தியத்தில் போரை நிறுத்த முடியும் என்றால், உக்ரைன்- ரஷியா போர் உள்ளிட்ட மற்று போர்களை உறுதியாக நிறுத்த முடியும்" எனக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டிரம்பிடம் உக்ரைனின் எரிசக்தி சிஸ்டம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டினார். அத்துடன், எங்களுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது பாராட்டத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் படையெடுத்தது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வரவில்லை.