உலகில் தனது செல்வாக்கை அமெரிக்கா இழக்கும்: உக்ரைன் ஜனாதிபதி கடும் கோபம்
உக்ரைன் - ரஷ்யா போரில் தங்களுக்கு போதுமான உதவியை வழங்க தவறுவதால், தனகு செல்வாக்கை அமெரிக்கா இழக்கும் நிலை வரலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையின் ஆண்டு நிறைவை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பின் போது ஜெலென்ஸ்கி இதை குறிப்பிட்டுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு ஆதரவளிக்க வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, அதில் இருந்து தவறினால், உலக அரங்கில் தனது செல்வாக்கை அமெரிக்கா இழக்கும் நிலை ஏற்படும் என்றார்.
மேலும், அவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால்... நேட்டோவை இழக்க நேரிடும், அமெரிக்காவின் செல்வாக்கை இழக்க நேரிடும், உலகில் அவர்கள் அனுபவிக்கும் தலைமைப் பதவியை இழக்க நேரிடும் எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு என அமெரிக்காவின் பல பில்லியன் டொலர் ஆயுத உதவி தொடர்பில் அந்த நாட்டில் மக்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கே ஜெலென்ஸ்கி இவ்வாறு பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான அமெரிக்க மக்களுக்கு பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு என பல பில்லியன் டொலர்களை ஆயுதமாக அளிப்பதில் உடன்பாடில்லை என்றே கூறப்படுகிறது.
இப்படியான ஒரு நெருக்கடி உருவானால், அமெரிக்க நிர்வாகம் உக்ரைனுக்கு உதவி அளிப்பதை நிறுத்தலாம் என்ற அச்சம் காரணமாகவும் ஜெலென்ஸ்கி இவ்வாறு கூறியிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.