உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை மறக்காம சாப்பிடுங்க
தற்போதைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் மட்டுமே பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.
அதற்கு ஆரோக்கியமான உணவுகள் அவசியம், குறிப்பாக ஜிங்க் நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
ஒரு நாளில் பெண்களுக்கு 8 மிகி ஜிங்க்கும், கர்ப்பிணிகள், ஆண்களுக்கு 11 மிகி ஜிங்க்கும் தேவைப்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு 12 மிகி ஜிங்க்கும் தேவைப்படுகிறது.
காய்கறிகள், பழங்கள் மற்றும் அசைவ உணவுகளில் ஜிங்க் சத்து நிறைந்து காணப்படுகிறது.
உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, ப்ரக்கோலி, காளான் மற்றும் பூண்டு போன்றவற்றில் கணிசமான அளவில் ஜிங்க் சத்து நிறைந்துள்ளது.
நமது அன்றாட உணவுகளில் இத்தகைய காய்கறிகளை அதிகளவு சேர்த்து கொள்வதன் மூலம் ஜிங்க் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம்.
இதுதவிர சணல் விதைகள், பூசணி விதைகள், பரங்கி விதைகள், தர்பூசணி விதைகள் போன்றவற்றிலும் குறிப்பிட்ட அளவில் ஜிங்க் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. ஆகவே இது போன்ற விதைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் ஜிங்க் சத்தை அதிகரிக்க முடியும்.
கோதுமை, அரிசி, கம்பு மற்றும் வரகரிசி போன்றவற்றில் ஜிங்க் அதிகம் உள்ளது. இந்த உணவுகளை பலவகைகளில் சமைத்து தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் அன்றாடம் சமையல் செய்ய பயன்படுத்தும் பருப்பு வகைகளில் கொழுப்பு, கலோரிகள் குறைவாகவும், புரதங்கள் மற்றும் ஃபைபர் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.