ஜனாதிபதி தேர்தல் நேரலை நேரடி விவாதத்தில் தடுமாறிய ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனிற்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற நேரடிவிவாதத்தின் போது ஜோபைடனின் தடுமாற்றம் மிகுந்த பதில்களும் செயற்பாடுகளும் கரிசனையை ஏற்படுத்தியுள்ளன.
சிஎன்என் ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி தேர்தல் விவாதம் பைடனின் பிரச்சாரகுழுவினருக்கு பல கேள்விகளிற்கு பதில் சொல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து அவரது பிரச்சார குழுவினர் பாதிப்புகளை சரிசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
பைடனும் டிரம்பும் குடியேற்றவாசிகள்,பொருளாதாரம், கருக்கலைப்பு உரிமைபோன்றவை குறித்து விவாதித்தனர்.
பைடனின் மெதுவான ஆரம்பம் ஜனநாயக கட்சியின் சிலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜோபைடனின் கரமுரடான குரலும் உடல்நிலை சரியில்லை என அவரது பிரச்சாரகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
பைடன் தனது சிந்தனையை இழந்ததாக தோன்றிய சில தருணங்களும், பார்வைக்கு தென்பட்ட சிறந்த விடயங்கள் இல்லை என பிபிசி தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நவம்பரில் பைடன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க ஊடகங்களில் ஆய்வாளர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.
குடியரசுக்கட்சியினரும் இதேவிடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை ஜனநாயக கட்சியினர் உடனடியாக ஜனாதிபதியின் பின்னாள் அணி திரண்டுள்ளனர்.