ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தெரிவு

Report

ஜப்பானின் அடுத்த பிரதமராக யோஷிஹைட் சுகா அந் நாட்டு பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திங்களன்று ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (எல்.டி.பி) தலைமைப் போட்டியில் ஸ்ட்ராபெரி விவசாயியின் மகனான சுகா (வயது 71) வெற்றி பெற்றார்.

இந் நிலையில் இன்று பாராளுமன்ற வாக்கெடுப்பில் அவரது பெரும்பான்மை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அவர் ஜப்பானின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அபேயின் நெருங்கிய நண்பரான புதிய பிரதமர் முன்னோடி கொள்கைகளைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடல்நலக்குறைவு காரணமாக ஷின்சோ அபே கடந்த மாதம் தனது இராஜினாமாவை அறிவித்தார்.

முன்னதாக புதன்கிழமை, அபே தனது இறுதி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி செய்தியாளர்களிடம் தனது கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த சாதனைகள் குறித்து பெருமைப்படுவதாகவும் கூறினார்.

1306 total views