பல வருடங்களாக இரத்த தானம் செய்து இலட்சக்கணக்கானவர்களின் உயிரை காப்பாற்றிய மனிதர்

Report
15Shares

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹரிசன் எனும் நபர் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக இரத்த தானம் செய்து வருகின்றார்.

இதன் ஊடாக 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

1951ம் ஆண்டில் ஹரிசனுக்கு 14 வயது இருக்கையில் பாரிய மார்பு அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது அவரது சுவாசப்பை ஒன்றும் நீக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களாக வைத்தியசாலையில் இருந்த ஹரிசன் ஒருவாறு உயிர்பிழைத்துள்ளார்.

இதற்கு முகம் தெரியாத பலர் தனக்கு வழங்கிய இரத்தமே காரணம் என தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் தனக்கு 18 வயது நிரம்பியதும் Australian Red Cross Blood Service ஊடாக இரத்ததானம் செய்து வந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் 17 சதவீதமான கர்ப்பிணிகளுக்கு Anti-D மருந்து ஏற்றப்படுகின்றது.

இதனை உற்பத்தி செய்வதற்கு ஹரிசனின் இரத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இதுவரை 2.4 மில்லியன் குழந்தைகளை இவர் காப்பாற்றியுள்ளார்.

1236 total views