சீனாவிலிருந்து செல்வோருக்கான தடை மேலும் நீடிப்பு

Report

சீனாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வெளிநாட்டினருக்கான தடை உத்தரவும் மேலும் ஒரு வாரம் நீடித்துள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

பெப்ரவரி முதலாம் திகதி விதிக்கப்பட்ட இந்த 14 நாட்கள் தடையுத்தரவானது இன்றையதினம் நிறைவடையவிருந்த நிலையில் , மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வியட்நாமில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகையானது 16 ஆக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், வைரஸின் பரவலை கட்டுப்படுத்த கிராமம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வியட்நாமின் பின் சூயென் மாவட்டத்தில் கம்யூனை சுற்றியுள்ள ஒரு பகுதியை தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் இன்று முதல் அடுத்த 20 நாட்களுக்கு குறித்த பகுதியில் உள்ள 10,000 குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

சீனாவுக்கு வெளியே ஒரு நாடு தனது பகுதியையொன்றை தனிமைப்படுத்தியுள்ளமை இதுவே முதன் முறை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1315 total views