உலகின் கடுமையான ஊரடங்கை அமுல் படுத்தியுள்ள நாடு!

Report
493Shares

உலகின் மிக கடுமையான ஊரடங்கு உத்தரவானது தெற்கு ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக தெற்கு ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு விதிமுறைகளில் கடும் கெடுபிடி காட்டப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக அடிலெய்ட் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிவேகம் கண்டு வருகிறது.

இந்த நிலையில் உலகின் மிக கடுமையான ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பள்ளிகள், பூங்காக்களில் உடற்பயிற்சி, பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது, திருமணம், இறுதி ஊர்வலம் என அனைத்திற்கும் அங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வெளியில் சென்று அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

14922 total views