பெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்!

Report
673Shares

எயர் கனடா சென்ரர் அல்லது ACC என ரசிகர்கள் அநேகரால் தெரிந்து கொள்ளப்பட்ட மையம் புதிய பெயர் பெறுகின்றது.

பல் நோக்கங்களிற்கும் பயனாக விழங்கும் இந்த அரங்கம் 2018 யூலை 1-ல் ஸ்கோசிய வங்கி அரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

TSN {The Sports Network} இந்த அரங்கத்தின் பெயர் உரிமையை பெறுவதற்கு ஸ்கோசிய வங்கி 20வருடங்களிற்கு 800மில்லியன் டொலர்களை வழங்கும் என தெரிவிக்கின்றது.

1999ல் இக்கட்டிடம் முதலில் திறக்கப்ட்ட போது எயர் கனடா வருடமொன்றிற்கு 4மில்லியன் டொலர்களை செலுத்தியது.

புதிய உடன்பாடு மிகப்பெரிய மதிப்புள்ள கட்டிடம் எனவும் வட அமெரிக்காவின் தொழில் முறை விளம்பர ஒப்பந்த உடன்படிக்கை கொண்டதெனவும் கூறப்படுகின்றது.

ரொறொன்ரோ மேப்பிள் லீவ்ஸ், ரொறொன்ரோ றப்ரஸ் மற்றும் Toronto Rock of National Lacrosse League ஆகிய அணிகளின் ஹோம் தளமாகும்.

21503 total views