கனடாவின் தமிழர் திருவிழா! பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்

Report

கனடா தமிழ் விழாவை சிறப்பித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் ‘வணக்கம்’ ட்வீட் தற்போது பல்லாயிரக்கணக்கான லைக்குகளை அள்ளியது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான கனடா தமிழர்களின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

கனடாவின் டொரன்டோ நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற ‘தமிழர் திருவிழா’ நடைபெற்றது. பேதமின்றி பல நாட்டு மக்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் நட்பு நாடுகளின் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் நாடு ‘கனடா’.

கலாசார வேற்றுமைகள் மறந்து உலகின் அத்தனை நாடுகளின் பல முக்கிய விழாக்களை அந்தக் கலசாரத்துக்குச் சொந்தமான மக்களோடு இணைந்து அதை அரசு விழாவாகவே கொண்டாடி வருகிறது கனடா.

கனடாவின் இந்த நட்புறவு முயற்சிகளுக்கு முழுமுதற் காரணமாக இருப்பவர் கனடா பிரதமர் ‘ஜஸ்டின் ட்ரூடே’.

இந்த வகையில், சமீபத்தில் ‘தமிழர் விழா’ ஒன்றை கனடா சிறப்பானதொரு விழாவாகக் கொண்டாடியுள்ளது. இந்தச் சிறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார் ஜஸ்டின் ட்ரூடே.

தமிழர்களின் கலாசாரத்தைப் பல்வேறு பரிமாணங்களிலும் அரங்கேற்றிய அவ்விழாவில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, ‘கனடா என்றுமே தமிழர்களுக்குத் தன்னுடைய தொடர் ஆதரவை அளித்து வருகிறது. ஈழத் தமிழர்களுக்காகவும் கனடா குரல் கொடுக்கத் தவறியதில்லை.

இலங்கையில் போர் நடந்த சமயங்களில் கனடா தமிழர்களுக்கு பெரும் ஆதரவு அளித்தது. போர் முடிவுக்கு வந்தாலும், தமிழர்களின் பிரச்னைகளுக்கான நீண்ட நாள் தீர்வு விரைவில் கிடைக்கும்.

1980-களில் அதிகளவிலான தமிழர்கள் கனடாவில் குடியேறத் தொடங்கினர். இன்று பல லட்சம் தமிழ்க் குடும்பங்கள் கனடாவில் வசிக்கின்றன.

அவர்களைக் கௌரவிக்கும் வகையில் இனி ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் தமிழர் பாரம்பர்ய மாதமாகக் கொண்டாடப்படும்’ என்றார்.

இதையடுத்து, தன் ட்விட்டர் பக்கத்தில் இளநீர் அருந்தும் புகைப்படத்துடன் ‘வணக்கம்’ தெரிவித்திருந்த ஜஸ்டின் ட்ரூடேவின் புகைப்படம் அவரது செயல்களுக்காவும் வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.

74284 total views