மருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

Report
875Shares

2016-டிசம்பர் மாதம் தனது மருத்துவ மனைவியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ரொறொன்ரோ நீதிமன்றம் புதன்கிழமை பிற்பகல் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

தனது மனைவியான டாக்டார் எலனா விறிக்-ஷாம்ஜியை கொன்றதாக டாக்டர் மொகமட் ஷாம்ஜி குற்றம் சுமத்தப்பட்டார்.இவரது உடல் சூட்கேஸ் ஒன்றிற்குள் வைக்கப்பட்டிருந்ததை டிசம்பர் 1-ல் கிளெயின்பேர்க் என்ற இடத்தில் ஒரு வீதியின் பக்கத்தில் கிடக்க கண்டு பிடிக்கப்பட்டது.

குடும்ப மருத்துவரான இவரை குரல்வளை நெரிக்கப்பட்டு, அடித்து கொல்லப்பட்டார் எனவும் இச்சம்பவம் இருவரும் இவர்கள்து மூன்று பிள்ளைகளுடன் வசித்த இவர்களது நோர்த் யோர்க் இல்லத்தில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1-ற்கிடைப்பட்ட காலப்பகுதியில் கொலை செய்யப்பட்டதாக நம்புவதாக விசாரனையாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.

மொகமட் ஷாம்ஜி ஒரு முன்னாள் ரொறொன்ரோ வெஸ்ரேன் வைத்தியசாலை ஊழியரும் ரொறொன்ரோ பல்கலைக்கழக அங்கத்தவருமாவார். இவரது மனைவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்தநள் இவர் மிசிசாகாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவரது ஜாமின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி மைக்கேல் பிறவும் புதன்கிழமை பிற்பகல் மறுத்து தீர்ப்பளித்தார்.

எட்டு மாதங்களிற்கு முன்னர் கைதானதிலிருந்து ஷாம்ஜி மில்ரனில் உள்ள Maplehurst Correctional Complex-ல் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் ஆரம்ப விசாரனை அடுத்த வாரம் ஆரம்பமாகின்றது.32066 total views