நூதனமாக திருடும் மோசடியாளர்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Report
117Shares

யோர்க் பிராந்திய பகுதியில் நாற்பதிற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் மெய்நிகர் நாணயமான ‘பிட்கொயின்’ எனும் டிஜிட்டல் நாணய முறையில் 300,000 டொலர்களிற்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தங்களை கனடா வருமானவரி முகவர்கள் என அறிமுகப்படுத்தி குடியிருப்பாளர்களை அணுகும் மோசடியாளர்கள், தவணை கடந்த வரிப்பணம் செலுத்த வேண்டும் என தெரிவிப்பதாகவும், அவ்வாறு மறுப்பு தெரிவிப்பவர்களை கைது செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

அண்மைக் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் மெய்நிகர் நாணயமான பிட்கொயினை பயன்படுத்தி பணத்தை அனுப்புமாறும் மோசடியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், யோர்க் பிராந்திய பொலிஸார், பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

5890 total views