கனடாவில் பெற்றோர் விடுப்பு நீடிப்பு!

Report
243Shares

இந்த வருட முடிவிற்கு முன்னர் பெற்றோர் விடுப்பில் செல்ல இருக்கும் தாய் தந்தையர் மத்திய அரசின் நீண்ட கால விடுப்பு நன்மைகளை பெறும் வாய்ப்பை பெறுகின்றனர். இந்த புதிய நடைமுறை அடுத்தமாதம் ஆரம்பிக்கின்றது.

இது சம்பந்தப்பட்ட சகல விபரங்களையும் மத்திய அரசாங்கம் இன்று அறிவிக்க உள்ளது. அரசாங்கத்தின் நீண்ட வாக்குறுதி மாற்றங்கள், தகுதியான புதிய பெற்றோர் பிள்ளை ஒன்று பிறந்தபின்னர் 18மாதங்கள் வரை வேலை வாய்ப்பு காப்பீடு நன்மைகளை பெற முடியும் என தெரிவிக்கின்றது.

அடுத்தமாதம் அமுல் படுத்தப்படும் இந்த சட்டம் குறித்த சரியான திகதி இன்று சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜீன்-ஈவ்ஸ் டக்ளொசினால் அறிவிக்கப்படும்.

ஒரு புதிய குடும்ப பராமரிப்பாளர் நலன் மற்றும் தகுதியுள்ள- விரைவில் தாயாகும் பெண்கள் குழந்தை பிறப்பதற்கு உரிய காலத்திற்கு 12வாரங்களிற்கு முன்னராக மகப்பேற்று நன்மைகளை பெறக்கூடியதாகவும் இருக்கும்.

இந்த மாற்றங்கள் கியுபெக்கை பாதிக்கமாட்டாது. கியுபெக் தனது சொந்த பெற்றோர் விடுப்பு திட்டத்தை கொண்டுள்ளது.

10429 total views