ஆபத்தான 16-வயது பெண் கொலையாளியை தேடும் கனடிய பொலிசார்?

Report
289Shares

ஹமில்ரன் பொலிசார் மிக அரிதான படியை எடுத்து இளம் பெண் ஒருவரின் விபரங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.16-வயதுடைய ஒலிவியா ஹால்-டேவிஸ் என்ற இப்பெண் மிகவும் ஆபத்தானவர் என தெரிவித்த பொலிசார் கொலை சம்பந்தமாக இவரை தேடுகின்றனர்.

இப்பெண்ணின் அடையாளங்களை வெளியிட ஹமில்ரன் பொலிசார் நீதிபதி ஒருவரிடமிருந்து அனுமதி பெற்றுள்ளனரென என பத்திரிகை வெளியீடொன்றில் தெரிவித்துள்ளனர்.

இவள் மற்றவர்களிற்கும் ஆபத்தானவள் என நம்புவதற்கு காரணம் இருப்பதாலும் தகவல்களை வெளியிடுவது இவளை பிடிக்க பொலிசாருக்கு உதவியாக இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் மிசிசாகாவை சேர்ந்த 33-வயது ஹெய்டர் காசிம்-றஷ்டி என்பவரின் மரணம் சம்பந்தமான கொலை குற்றத்திற்காக தேடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மூன்று இளம் பாலியல் தொழிலாளர்கள் இந்த மனிதனிடம் திருட முனைந்ததாகவும் பின்னர் அவரை குத்தி கொன்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரனையின் மூலம் பொலிசார் ஹால்-டேவிஸ் உட்பட மூவரை கொலைக்குற்றத்திற்காக கைது செய்துள்ளனர்.

ஹால்-டேவிஸ் ஜாமின் நிபந்தனையில் விடுவிக்கப்பட்டபோதும் அக்டோபர் 25ல் அதனை மீறியுள்ளாள்.

இவள் தற்சமயம் ரொறொன்ரோ பகுதியில் இருப்பதாக பொலிசார் நம்புகின்றனர்.

தகவல் தெரிந்தவர்கள் ரொறொன்ரோ பொலிஸ் சேவை 12-வது டிவிசன் 416-808-1200 அல்லது ஹமில்ரன் பொலிஸ் 905-546-4925 அல்லது கிரைம் ஸ்ரொப்பஸ் 1-800-222-8477 அல்லது அனாமதேய ரிப்சை http//www.crimestoppershamilton.cமூலம் தெரிவிக்குமாறும் கேட்டு கொள்ளப் படுகின்றனர்.

11377 total views