விமானத்தில் சிறிய கத்திகள் கொண்டு செல்ல அனுமதி ஆனால் பேபி பவுடர் தடை!

Report
139Shares

ஒட்டாவா--விமான சேவையின் புதிய கட்டுப்பாட்டு மாற்றங்கள் இம்மாத இறுதியில் நடைமுறைக்கு வருகின்றன. விமான பயணிகள் பெரும்பாலான விமானங்களில் சிறிய கத்திகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் ஆனால் அதே சமயம் பேபி பவுடர் தடை செய்யப்படுகின்றது.

ஆறு சென்ரி மீற்றர்கள் வரையிலான பிளேட் கத்திகள்--பெரிய ஒரு காகித கிளிப் அளவிலான-உள்நாட்டு மற்றும் பெரும்பாலன சர்வதேச விமானங்களில் அனுமதிக்கப்படும்.

எந்த அளவிலான பிளேட்டுக்களும் தொடர்ந்து தடையில் இருக்கும். யு.எஸ்.விமானங்களில் ரேசர் கத்திகள் மற்றும் எந்த அளவிலானதுமான பெட்டி வெட்டிகளின் தடைகள் தொடர்ந்தும் இருக்கும்.

சில பவுடர்கள் மற்றும் சிறு மணி பொருட்கள் 350மில்லி லிட்டர்கள் கொண்ட தொகுதி--சோடா கான் அளவு-தடைசெய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்களில் குளியல் உப்புக்கள், கடல் உப்பு, பேபி பவுடர், பாத பவுடர், சமையல் பவுடர், மற்றும் மணல் போன்றவை அடங்குகின்றன. குழந்தை உணவு புரோட்டின் பவுடர் தேயிலை மற்றும் கோப்பி அனுமதிக்கப்படும்.

இந்த மாற்றங்கள் நவம்பர் 27ல் நடைமுறைக்கு வரும் என கனடா போக்குவரத்து பிரிவு தெரிவிக்கின்றது.

5227 total views