ரொறொன்ரோவில் குளிர்கால முதல் நாளில் 63 சாலை விபத்துக்கள்!

Report
66Shares

ரொறொன்ரோ பெரும்பாக மக்கள் வருடத்தின் முதல் குளிர்கால சுவையை அனுபவித்த ஆரம்பநாளில் இரவு பூராகவும் 12-மணித்தியாலங்களில் மொத்தம் 63 சாலை மோதல்கள் பொலிசாரின் கவனத்திற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை பிற்பகல் 5மணியிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 5மணிவரையிலான கால கட்டத்தில் சொத்து சேதம் சம்பந்தப்பட்ட மோதல்கள் 45 மற்றும் காயங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள்18 அறிவிக்கப்பட்டுள்ளதாக கான்ஸ்டபிள் கிளின்ட் ஸ்ரிப்பே தெரிவித்துள்ளார்.

நகரின் வடக்கு எல்லை பகுதிகளில் பெரும்பான்மையா மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இப்பகுதிகளில் டவுன் ரவுனை விட அதிக அளவு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

சாரதிகளின் தவறுகளாலும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் பனிக்கட்டி நிலைமைகள் காரணமாக வாகனங்களை நிறுத்த முடியாததால் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின.

சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் புத்தம் புதிய லம்பொகினி ஸ்போட்ஸ் கார் அதிகாலை 1-மணியளவில் விபத்திற்குள்ளாகியது.

வீதிகள் வழுக்கலாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்ரி மற்றும் ஒறில்லாவிற்கு இடையில் நெடுஞ்சாலை 11ல் அத்தியாவசியமான பயணங்களை தவிர்க்குமாறு ஒன்ராறியோ மாகாண பொலிசார் வாகன சாரதிகளை எச்சரிக்கின்றனர்.

யோர்க் பிராந்தியத்தின் வடபகுதிக்கு தனிப்பட்ட பனி புயல் இன்று பிற்பகல் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 20சென்ரி மீற்றர்கள் வரையிலான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.


2249 total views