கனேடிய பொலிஸ் இணையத்தளத்தில் தீவிரவாதிகள் கைவரிசை!

Report
20Shares

கனடா பொலிஸ் நிலையம் ஒன்றின் இணையத்தளம் ஐ.எஸ். தீவிரவாதிகளினால் முற்றாக செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஸ்கற்சுவான்-பிரின்ஸ் அல்பேர்ட் எனப்படும் கனடா பொலிஸ் நிலையம் ஒன்றின் இணையத்தளம், நேற்று காலை முற்றாக செயல் இழந்த நிலையில், கறுப்பு திரையில் ‘Hacked by Team System Dz. I Love Islamic state’ என்ற செய்தியுடன் ஆங்கிலமல்லாத மொழியில் இசையுடன் கூடிய பின்னணியில் ஓடிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, ஐ. எஸ் தீவிரவாதிகளினால் இணையத்தளம் முடக்கப்பட்டமை தெரிய வந்தது. எவ்வாறெனினும், குறித்த ஊடுருவலினால் பொலிசாரின் எவ்வித நடவடிக்கைகளும் பாதிக்கப்படவில்லை என பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

1138 total views