புகைத்துக் கொண்டே உயிரை விட்ட நபர்!

Report
55Shares

கனடா – ஒண்டாரியோ பகுதியில் சிகரெட் புகைத்தபோது ஏற்பட்ட எதிர்பாராத விதமான தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் சுவாசக் குறைப்பாடு காரணமாக ஆக்சிஜன் கருவி ஒன்றின் மூலம் செயற்கை முறையில் அடிக்கடி சுவாசித்து வந்துள்ளார்.

அதேபோன்று குறித்த நபருக்கு புகைத்தல் பழக்கமும் இருந்து வந்தள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் செயற்கை சுவாசத்துடன் கூடிய சிலிண்டருடன் குறித்த நபர் புகைத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது எதிர்பாராத விதமாக செயற்கை சுவாசத்தினை பெற்றுக் கொள்ள பயன்படுத்திய சிலிண்டர் வெடித்த காரணத்தினால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிகரெட் புகைத்தபோது, சுவாசத்திற்காக பயன்படுத்தப்பட்ட கருவி வெடித்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2204 total views