மது காரணமாக அதிகாலையில் மரண விபத்து!

Report
92Shares

கனடா-இன்று அதிகாலையில் நியு மார்க்கெட் பகுதி குவிலிம்பெரி கிழக்கில் மரணத்தை ஏற்படுத்திய விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்திற்கு காரணம் மது என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நெடுஞ்சாலை 48 மற்றும் டேவிஸ் டிரைவ் அருகில் காலை 6மணிக்கு முன்னராக இரண்டு வாகனங்கள் மோதியுள்ளன.

வடக்கு பாதை வாகனம் ஒன்று திசை மாறி நெடுஞ்சாலையின் தெற்கு பாதை லேனிற்குள் நுழைந்ததால் தெற்கு பாதை வாகனத்திற்குள் இருந்த பயணி ஒருவர் கொல்லப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன்ட கெரி சிமித் தெரித்துள்ளார்.

திசை மாறிய வாகனத்தின் ஆண் சாரதி உயிராபத்தானதென கருதக்கூடிய காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

போதையில் வாகனம் செலுத்திய காரணத்திற்காக இவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோதலிற்கு மது ஒரு வெளிப்படையான காரணமென தெரிவிக்கப்பட்டதுடன் இது குறித்த விசாரனை இடம்பெறுகின்றது.

நெருங்கிய உறவினர்களிற்கு தெரியப்படுத்தப்படும் வரை பாதிக்கப்பட்டவரின் இனம் வயது போன்ற விபரங்களை பொலிசார் தெரியப்படுத்தவில்;லை.

நெடுஞ்சாலை 48டேவிஸ் டிரைவ் மற்றும் விவியன் வீதிக்கிடைப்பட்ட பகுதி பிற்பகல் வரை மூடப்பட்டிருக்கும்.

4258 total views