தங்கள் முதல் குழந்தையை கொண்டாடும் முன்னாள் கனடிய யு.எஸ். ஹாக்கி பெண் போட்டியாளர்கள்!

Report
80Shares

ஹாக்கி பிரபல்யங்களும் முன்னாள் போட்டியாளர்கள் இருவருமான கரொலின் குயெலெட் மற்றும் ஜூலி சு தங்களது பெண்குழந்தையை வரவேற்றுள்ளனர்.

இக்குழந்தை லிவ் சு-குயெலெட்டின் வருகை ருவிட்டர மூலம் உலகிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போதும் மிகப்பெரிய பெண் ஹாக்கி வீராங்களைகள் என கருதப்பட்ட குயெலெட் மற்றும் சு இருவரும் பல தடவைகள் ஓருவருக்கொருவர் மோதியுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

38வயதுடைய குயெலெட் கனடிய ஹாக்கி அணியின் தலைவராக இருந்து சோச்சி ஒலிம்பிக் வெற்றி மற்றும் நான்கு ஒலிம்பிக் தங்க பதக்கங்களையும் வென்றவர்.கிளாக்சன் கோப்பை போட்டியிலும் தங்க பதக்கம் வென்றதுடன் உலக ஹாக்கி சம்பியனாகவும் வந்தவர்.

சு 35வயது நான்கு தரம் ஒலிம்பிக் வென்றவர். குளிர்கால விளையாட்டுக்களில் உலக சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை. அத்துடன் 2011 முதல் 2013வரை யு.எஸ். தேசிய பெண்கள் ஹாக்கி அணியின் கப்டனாக இருந்தவர்.

இவர்களது 13வது வயதில் ஒருவருக்கு ஒருவர் எதிராக விளையாடியவர்கள். இருவரும் 13 இலக்கத்தை அணிந்திருந்தவர்கள்.

இந்த சோடிகள் தற்போது கனடிய பெண்கள் ஹாக்கி அணி தோழர்கள்.

சோசல் மீடியாவில் ஹாக்கி விசிறிகள் குழந்தை பிறந்த செய்தியை கொண்டாடினர்.

கரொலைன் குயெலெட் கனடா மற்றும் சு ஜூலி யு.எஸ். ஒலிம்பிக் போட்டியாளர்கள் இருவரையும் அனைவரும் வாழ்த்தினர்.இரு வெவ்வேறு அணிகளின் தலைவிகள் இன்று ஒரு குழந்தையின் பெற்றோர்கள்.

ஓரின சேர்க்கையாளர்கள் தொழில் ரீதியாக விளையாடுவது குறித்து பெண்கள் ஹாக்கி அதன் உள்ளுணர்வு குறித்து பாராட்டியது.

இந்த குழந்தை லிவ் ஹாக்கி மட்டையை பிடிக்குமானால் எந்த தேசிய அணிக்காக விளையாடும் என்ற ஒரு ஒரு கேள்வி எழுந்துள்ளது.

3707 total views