புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கனடா எச்சரிக்கை

Report
639Shares

அமெரிக்காவில் ஹெய்டியைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் பேர் வாழவும் வேலை செய்யவும் அனுமதித்துள்ள தற்காலிக வதிவிட அனுமதித்திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் திட்டம் எல்லையில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எழுச்சிக்கு வழிவகுக்கும் என கனேடிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹெய்டியிலுள்ள நிலைமைகள் கணிசமாக முன்னேறியுள்ள நிலையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அமெரிக்காவிலுள்ள ஹெய்டியர்கள் நாடு திரும்புவதற்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக வெளியிட்ட அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான எச்சரிக்கையை கனேடிய அரசு வெளியிட்டுள்ளது.

தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு கனடாவில் திறந்த வரவேற்பு இருக்கும் போது அவர்கள் கனடாவுக்குள் நுழையும் போது சரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஒழுங்கற்ற முறையில் கனடாவுக்குள் நுழைய முடியாது என்று கனேடிய குடிவரவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஹமட் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் “தொடர்நது கடுமையான விதிகள் உள்ளன. அதே வலுவான மதிப்பீட்டு செயல்முறை பொருந்தும்.உண்மையாக ஆபத்தில் இருப்பவர்களாக கருதப்படுபவர்கள் வரவேற்றக்கபடுவர்.

கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதப்படுபவர்கள் நீக்கப்பட்டனர். நாம் மிகவும் கவனமாக பின்பற்றுகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

21770 total views