1989 மொன்றியல் படுகொலை நினைவு தினம்!

Report
46Shares

கனடியர்கள் மொன்றியல் படுகொலை நிகழ்வின் 28வது நினைவு தினத்தை இன்று மொன்றியலில் அனுஷ்டிக்கின்றனர்.

துப்பாக்கிதாரி ஒருவன் 14 பெண்களை சுட்டு கொன்றதுடன் 14பேர்கள் படுகாயமடைந்தனர்.

பிரமுகர்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் குடிமக்கள் இன்றய தினம் உத்தியோக பூர்வமாக இடம்பெறும் இந்நிகழ்வில் பங்குகொள்கின்றனர்.

துப்பாக்கி சூடு நடைபெற்ற பாடசாலையில் அமைந்துள்ள நினைவுசின்ன முத்திரையின்முன்னால் வெள்ளை ரோஜா மலர்வளையம் இன்று காலை வைக்கப்படும். 1989 டிசம்பர் மாதம் 6-ந்திகதி இந்த படுகொலை சம்பவம் நடந்தது.

இந்நிகழ்வில் துணை பிரதமர் டொமினிக் அன்கிளாட், மேயர் வலரி பிளன்ரே மற்றும் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவின் மனைவியார் ஷோபி கிரெகொரி ஆகியவர்கள் கலந்து கொள்கின்றனர்.

கொலையுண்ட 14 பெண்களின் ஞாபகார்த்தமாக பதின்நான்கு ஒளிவிட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. பிற்பகல் 5-மணி முதல் இரவு 10-மணிவரை இந்த ஒளிவிட்டங்கள் வானில் பிரகாசிக்கும்.

இந்த படுகொலை சம்பவம் மொன்றியல் Ecole polytechnique இடம்பெற்றது.

2403 total views