கடுமையான குளிர் வெப்பநிலையில் இருந்து சிறு விடுதலை!

Report
254Shares

ரொறொன்ரோ பெரும்பாகத்தை கடந்த சில வாரங்களாக தாக்கிய கசப்பான கடுங்குளிர் வெப்பநிலையில் இருந்து சிறு விடுதலை கிடைத்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் கனடா சுற்று சூழல் பிரிவினரால் விடுக்கப்பட்டிருந்த அதிதீவிர குளிர் எச்சரிக்கை- ரொறொன்ரோ, வாஹன், றிச்மன்ட் ஹில், மார்க்கம், நியுமார்க்கெட், ஜோஜினா மற்றும் பீல் ஹால்ரன் பிரதேசங்கள்- உட்பட்ட ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பல பகுதிகளில் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஞாயிற்று கிழமை வெப்பநிலை -7 C ஆக காணப்படும். ஆனால் காலையில் விறைப்பாக காணப்படுவதுடன் -28 ஆக காணப்படும்.

இரவு பனி பொழிவு மற்றும் பனி புயல் ஏற்படும் சாத்திய கூறுகள் தென்படுவதாகவும் இந்நிலை திங்கள்கிழமை வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை வெப்பநிலை பூச்சியமாக காணப்படுவதுடன் வார மத்தியில் வெப்பநிலை கூட வெப்பமாக காணப்படும்.

புதன்கிழமை உயர் வெப்பநிலை 1 C என வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளதுடன் 4 C உயர்வாக காணப்படும். ஜனவரியில் வெப்பநிலை சராசரிக்கும் உயர்வாக காணப்பட்டாலும் பனியும் புயலும் காணப்படும் என்பதனையும் மனதில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் ஒரு விடுதலை கிடைப்பது சாதாரண கொடை ஆனால் குளிர் காலம் திரும்ப வரும்.

11109 total views