ரொறொன்ரோ கிழக்கு மின்செயலிழப்பினால் சுரங்க ரயில் சேவை ஸ்தம்பிதம்!

Report
31Shares

மின்செயலிழப்பினால் ரொறொன்ரோ கிழக்கு சுரங்க ரயில் பாதை சேவை பல நிலையங்களில் மூடப்பட்டது.

ரிரிசியின் லைன் 2 பாதை புறோட்வியு மற்றும் வூட்பைன் நிலையங்களில் திருப்பப்பட்டு ரயில் சேவைக்கு பதிலாக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

இன்று காலை ரொறொன்ரோவில் கிட்டத்தட்ட 20,000 வீடுகளில் தற்காலிக மின் தடை ஏற்பட்டதாக ரொறொன்ரோ ஹைட்ரோ வன் தெரிவித்தது.

ரிரிசி போக்குவரத்து சேவைகளிலும் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டன.

எக்லிங்ரன் அவெனியு கிழக்கு, லேக் ஷோர் புளுவாட், யங் வீதி மற்றும் விக்டோரி பார்க் அவெனியு ஆகிய பகுதிகள் முதலில் பாதிக்கப்பட்டதாக அதிகாலை 5.45-மணியளவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ வண்ணிலிருந்து மின் இழப்பு ஒன்று ஏற்பட்டதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீன்வூட் யார்ட்டில் மின்சாரம் இல்லாததால் கிட்டத்தட்ட 30 முதல் 35 ரயில்கள் அகப்பட்டு கொண்டதாக ரிரிசி தெரிவித்துள்ளது. இவைகளை சேவைக்குட்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.

அவசரம் மிக்க காலை நேரம் அவதிக்குள்ளானது.

வாடிக்கையாளர்களிற்கு மாற்று வழியாக கென்னடி மற்றும் மெயின் நிலையங்களிலிருந்து மாற்று வழியாக GO போக்கு வரத்தில் செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மின் செயலிழப்பிற்கான காரணம் குறித்து விசாரனை இடம்பெறுகின்றதென ஹைட்ரோ வண் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காலை 8.30 மணிக்கு சிறிது பின்னராக நிலைமை சீராக்கப்பட்ட மின்சாரம் வழமைக்கு திருப்பபட்டுள்ளது.

1569 total views