டொலராமா பொருட்களினால் பிரத்தியேக ஆடைகள்!

Report
84Shares

நாகரீக டிசைன்கள் மிக விலை உயர்ந்தது மட்டுமன்றி கடினமான ஒரு களமுமாகும்.

தேவையான துணிகளை வாங்குவதும் தயாரிப்பதும் கடினமாகவும் இருக்கும்.

பொருட்களை வாங்குவது மிக விலையுயர்ந்தது. ஆனால் மொன்றியலை சேர்ந்த வடிவமைப்பாளரான கொலின் மெரிடித் என்பவர் இத்தடைகளை மீற வழிகளை கண்டுபிடித்துள்ளார்.

வடிவமைப்பு ஆர்வலர்களிற்கு ஆடைகளை உருவாக்க பணக்காரராக இருக்க தேவை இல்லை என்பதை உணர்த்த விரும்பினார். ஆக்க திறன் போதுமென்பது இவரது எண்ணம்.

இவரது மிக அண்மைக்கால தொகுப்புக்கள் Dollar Wears என அழைக்கப்படுகின்றன.

இவற்றிற்கு தேவையான பொருட்களை எங்கு வாங்கினார் தெரியுமா? டொலராமா கடையின் நடைபாதைக்குள் சென்று கொண்டிருந்த சமயம் கண்டு பிடித்தார். அங்கு கிடைக்கும் பொருட்கள் உபயோகமானதென உணர்ந்தார்.

டொலராமா பொருட்களை உபயோகிப்பது மலிவானதாகும். இவரது படைப்புக்களும் அடிப்படை அழகானவை.

தனது வீட்டின் படுக்கை அறையில் தையல் மெசின் ஒன்றை வைத்து தயாரிக்கின்றார்.

இவரது தொகுப்பில் முதலில் வடிவமைத்தது மதிய போசன பைகளினால் ஜக்கெட் ஒன்றை தயாரித்தது.

குடைகளிலிருந்தும் ஜக்கெட்டை தயாரித்தார். மூன்று ஜக்கெட்டுக்களை Ziploc,பீச் பந்துகள் மற்றும் டொலராமா பிளாஸ்டிக்பைகள் போன்றனவற்றினாலும், முகம் துடைக்கும் துவாலை மற்றும் தொங்கும் சப்பாத்து அடுக்கு கொண்டு சுவெட்டர்-புள்ஓவர்- போன்றனவற்றை தயாரித்துள்ளார்.

இவை மட்டுமன்றி துப்பரவு செய்ய பயன்படுத்தும் J-cloths, பாத்திரம் சுரண்டல் மற்றும் மதிய போசன பை ஆகியனவற்றால் மென்மையான சப்பாத்துக்களையும் உருவாக்கியுள்ளார்.

ராப் பாடகர் டிரேக் அண்மையில் அவரது இன்ஸ்ரகிராமில் மெரெடித் தயாரித்த தொப்பியுடன் கூடிய ஜக்கெட் அணிந்திருந்த படத்தை வெளியிட்டுள்ளார்.

3319 total views