ஆரம்ப பாடசாலை முதல் நாளில் பிரகாசிக்கும் இளவரசி சார்லட்!

Report
48Shares

2வயதான கேம்பிரிட்ஜ் இளவரசி சார்லட்டின் தனது ஆரம்ப பாடசாலையின் முதல் நாளான திங்கள்கிழமை பாடசாலை செல்லும் தோற்ற படங்களை றோயல் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

கென்னிங்ஸ்ரன் மாளிகை அவர்களது ருவிட்டர் கணக்கில் வெளியிட்ட படங்களில் பிரகாசிக்கும் சார்லட் மாளிகையின் படிகள் மேல் அமர்ந்திருக்கும் காட்சி பிரகாசமாக உள்ளது.

இப்படங்களில் சார்லட் சிவப்பு காலணி மற்றும் றோஸ் நிற கழுத்து துண்டுடன் கூடிய ஒரு கோர்ட் ஆகிய ஆடைகளுடன் இவரது தாயார்-கேம்பிரிட்ஜ் இளவரசி கத்தரின் மிடில்ரனால் சார்லட் முதல் நாள் ஆரம்ப பாடசலைக்கு செல்வதற்கு சிறிது முன்னராக பிடிக்கப்பட்டது.

எதிர்வரும் மே மாதம் சார்லட்டிற்கு 3வயது ஆகின்றது.

2265 total views