1998-ன் பனிப்புயலை 20-வருடங்களின் பின் திரும்பி பார்த்தால்?

Report
96Shares

இந்த வாரத்தில் இருந்து 20-வருடங்களிற்கு முன்னர் 1998 ஜனவரி 4 கியுபெக் தென்பகுதி மற்றும் ஒன்ராறியோவின் கிழக்குபகுதி 100-மில்லி மீற்றர்களிற்கும் மேலான அளவு உறை மழை மற்றும் பனிக்கட்டிகள்-ஒரு பனிப்புயல் போன்றனவற்றால் அடிக்கப்பட்டு ஐந்து நாட்களிற்கு நிலைத்தது.

இதன் உச்சத்தில் கிட்டத்தட்ட கியுபெக்கின் மக்கள் தொகையில் அரைப்பங்கு-மற்றும் ஒரு மில்லியனுக்கும் மேலான ஒன்ராறியோ வாசிகள் அது மட்டுமன்றி நியு பிறவுன்ஸ்விக்கில் ஆயிரக்கணக்கானவர்கள் அதிக பல வாரங்கள் இருட்டில் விடப்பட்டனர்.

கிட்டத்தட்ட 35-கனடியர்கள் புயலினால் கொல்லப்பட்டனர். கார்பன் மொனொக்சைட் நச்சுத்தன்மை. தீ. அதிர்ச்சி மற்றும் உடல் வெப்ப குறைப்பு போன்றன வற்றால் மரணம் ஏற்பட்டதென கூறப்படுகின்றது.

இந்த இயற்கை பேரிழிவுகள் கனடிய வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமானதான ஒன்றாகும்.

பெரும்பாலான கியுபெக் மக்கள் எங்கும் போக முடியாத நிலையில் இருந்தனர். பனியினால் வீதிகள் பல மூடப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான மரங்கள் கிளைகள் பனிக்கட்டிகளின் பாரம் தாங்காமல் முறிந்து விழுந்து மின்சார கம்பங்களையும் முறிந்து விழச்செய்தன.

முதியவர்கள் உட்பட 600,000 மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

அதிகாரிகளினால் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

கனடிய வரலாற்றில் கனடிய துருப்புக்களிற்கு இத்தருணம் மிகப்பெரிய அமைதி நேரத்தை பயன் படுத்தும் தருணமாக அமைந்தது. 15,000ற்கும் மேற்பட்ட துருப்புக்கள் கியுபெக் மற்றும் ஒன்ராறியோவின் கிழக்கு பகுதிகளிற்கு ஆப்பரேசன் மீள்மை நடவடிக்கைகளிற்கு அனுப்ப பட்டனர்.

இப்புயல் மகத்தான ஒரு நிதி தாக்கத்தை ஏற்படுத்தியது.

பல வழிகளில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன. 300,000 பண்ணை மிருகங்கள் இறந்தன.

4612 total views