அப்புறப்படுத்தப்பட்ட ஊசியால் குத்தப்பபட்ட குழந்தை!

Report
48Shares

பிரிட்டிஷ் கொலம்பியா--விக்டோரியா டவுன்ரவுன் மக்டொனால்ட் உணவகம் ஒன்றில் குழந்தை ஒன்றிற்கு அப்புறப்படுத்தப்பட்ட ஊசியால் குத்தப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது குறித்து பொலிசார் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை விக்டோரியா பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தங்கள் 3-வயது குழந்தை அழுவதையும் மூடியற்ற ஊசி ஒன்று குழந்தைக்கு அருகில் கிடந்ததையும் பெற்றோர் கவனித்துள்ளனர்.

குழந்தை சோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பொலிசார் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.

மக்டொனால்ட் உரிமையாளர் இச்சம்பவத்தை மிக மோசமாதாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி பூராகவும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்கிழமையும் இதே போன்று மற்றொரு ஊசி சம்பவம் விக்டோரியாவில் இடம்பெற்றது.

பெண் ஒருவர் தனது நாயுடன் நடந்து கொண்டிருக்கையில் ஊசியால் குத்தப்பட்டுள்ளார். வழியில் பை ஒன்றை நாய் குப்பை தொட்டிக்கு அருகில் கண்டது. நாயிடம் இருந்து பையை பறித்த போது ஊசி குத்தியதை உணர்ந்துள்ளார். பையை திறந்து பார்த்த போது பைக்குள் பல மூடிகளும் மூடியற்ற ஊசிகளும் இருந்துள்ளது.

பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

1843 total views