5-ஆண்டு நிலையான அடமான வட்டி விகிதங்களை அதிகரிக்கும் கனடிய வங்கிகள் இரண்டு!

Report
145Shares

கனடாவின் மிக பெரிய வங்கிகள் இரண்டு தங்களது ஐந்து வருட நிலையான அடமான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன.

கனடிய றோயல் வங்கி மற்றும் கனடா ரொறொன்ரோ டொமீனியன் வங்கி ஆகிய இரு வங்கிகளுமே இவைகளாகும்.

றோயல் வங்கி தனது ஐந்து வருட நிலையான அடமான விகிதத்தை 4.99 சதவிகிதத்திலிருந்து 5.14சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

25-வருட கடன்தீர்ப்பு உடனான ஐந்து-வருட நிலையான அடமான வட்டி விகிதமான வங்கியின் விசேட சலுகை விகிதம்3.39 சதவிகிதத்திலிருந்து 3.54ஆக உயர்த்தியுள்ளது.

ரொறொன்ரோ-டொமீனியன் வங்கி ஐந்து-வருட நிலையான விகிதத்தை 5.14ஆக அதிகரிக்கின்றது.2014-பிப்ரவரியிலிருந்து முதல் தடவையாக ஐந்து சதவிகிதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது.

இவைகளை தொடர்ந்து தனது வரி விகிதங்களை பரிசீலனை செய்து வருவதாகவும் வெகு விரைவில் மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் ஸ்கோசிய வங்கி தெரிவித்துள்ளது.

பெரும்பாலானவர்கள் கனடா வங்கியும் அதன் முக்கிய வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் ஊகிக்கின்றனர்.

அதிகரிக்கும் பிரதான கடன்விகிதம் அனுசரிப்பு அடமான விகித கட்டணம் மற்றும் ஏனைய கடன்களான-வீட்டு சமபங்கு வரி கடன் உட்பட அனைத்து கட்டணங்களும் அதிகரிக்கலாம் என கருதப்படுகின்றது.


5062 total views