ரொறொன்ரோ இரண்டாம் நிலை பாடசாலைகளிற்கு Naloxone பெட்டிகள்!

Report

அளவிற்கதிகமான ஓபியோட் பாவனையால் ஏற்படும் தாக்கத்தை பின்னடைய செய்யும் Naloxone-ஐ மிக விரைவில் இரண்டாம் நிலை பாடசாலைகளிற்கு வழங்க ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை சபை முன்வந்துள்ளது.

ஒவ்வொரு பாடசாலையிலும் இரண்டு முதல் மூன்று ஊழிளயர்கள் உறுப்பினர்களிற்கு சரியான முறையில் தேவைக்கு அதிகமான அளவை கண்டறிந்து Naloxone கொடுப்பதற்கு பயிற்சி அளிக்கப்படும் என கல்வி சபை தெரிவித்துள்ளது.

இப்பயிற்சி மார்ச் விடுமுறைக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் இறுதியில் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.

பயிற்சி முடிவடைந்த பின்னரே naloxone kits பாடசாலைகளிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெட்டிகள் இலகுவாக அணுக கூடிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்.

அளவிற்கதிகமான உள்வாங்கிகளை மூன்று முதல் ஐந்து நிமிடங்களிற்குள் இவை பின்னடைய செய்ய கூடியவை. ஓபியோட்ஸ் மூளைக்கு செல்வதை தற்காலிகமாக இவை தடுக்ககூடியதெனவும் கூறப்பட்டுள்ளது.

அளவிற்கதிகமான ஓபியோட்டினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 2004ற்கும் 2014ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 77சதவிகிதமாக அதிகரித்துள்ளதென ரொறொன்ரோ பொது சுகாதார சபை தெரிவிக்கின்றது.

4880 total views