நான்கு வருடங்கள் வாழ்க்கை ஆதரவு மெசினுடன் வாழ்ந்த குழந்தை மரணம்!

Report

பிரின்ஸ் அல்பேட்,சஸ்கற்சுவான்--நான்கு வயதுடைய பெண் குழந்தை ஒன்று போதையில் வாகனம் செலுத்தியதால் ஏற்ப்பட்ட மோதலில் பிறந்ததிலிருந்து வாழ்க்கை ஆதரவு மெசினுடன் வாழந்து வெள்ளிக்கிழமை மெசின் எடுக்கப்பட்டதால் உயிரிழந்த சோக சம்பவம் சஸ்கற்சுவானில் நடந்துள்ளது. விபத்து தாயாரை கொன்றது.

2013 யூலை மாதம் விபத்து நடந்தது. அச்சமயம் பேபி அரோரா தாயின் கர்ப்பத்தில் இருந்தாள். தாய் 26-வாரங்கள் கர்ப்பவதியாக இருந்த சமயம் போதையில் வாகனம் செலுத்திய சாரதி ஜெரமயா அரோராவின் தாய் லெபினியின் சினேகிதியின் வாகனத்துடன் மோதியுள்ளான். வாகனத்தில் லெபினியும் இருந்துள்ளார்.

மணித்தியாலத்திற்கு 50-கிலோ மீற்றர்கள் செல்ல வேண்டிய பாதையில் ஜெரமயா 150-கிலோ மீற்றர்களில் சென்று வாகனத்துடன் மோதினான். இரத்தத்தில் மது அளவு சட்ட வரம்பை விட இரண்டிற்கும் மேலாக இருந்துள்ளது. நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

லெபினியின் சினேகிதியான 21வயத ரெய்லர் லிட்வின் சம்பவ இடத்தில் இறந்துவிட்டார்.

லெபினி குழந்தையை பிரசவிக்கும் வரை- அறுவை சிகிச்சை மூலம்-குழந்தை அரோராவை பெறும் வரை உயிருடன் இருந்துள்ளார்.

அரோராவிற்கு விபத்தில் மூளை பாதிக்கப்பட்டதால் பெரும்பாலான காலத்தை வைத்தியசாலையில் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டு வாரங்களிற்கு முன்னர் சிறு நீரகமும் செயலிழந்தது. உபகரணங்களின் உதவியுடன் உயிர் வாழ்ந்த அரோரா ஆதரவு உபகரணங்கள் கழட்டப்பட்டன. நான்கு வயது சிறுமியின் உயிர் பிரிந்து விட்டது.

அவளது குடும்பத்தினருக்கு இது மற்றுமொரு அதிர்ச்சியாகும்.

ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 65,000 கனடியர்கள் போதையில் வாகனம் செலுத்தியவர்களால் கொல்லப்படுகின்றனர் என போதையில் வாகனம் ஓட்டுபவர்களிற்கெதிரான பெண்கள் அமைப்பு (MADD), தெரிவிக்கின்றது.

2303 total views